தேவையானவை..
- பாசுமதி அரிசி – 2 கப்
- புதினா – ஒரு கட்டு
- கொத்தமல்லி – ஒரு கட்டு
- பச்சை மிளகாய்- 1
- பூண்டு – ஒரு பல்
- இஞ்சி –ஒரு சிறு துண்டு
- பட்டை 1
- கிராம்பு- 1
- சோம்பு-1/4 டீஸ்பூன்
- சின்ன வெங்காயம் -2
- தேங்காய் -1டேபிள்ஸ்பூன்
- கேரட் துருவல் – ¼ கப்
- உருளைக்கிழங்கு- 1
- பச்சை பட்டாணி-கால் கப்
- உப்பு தேவைக்கு
செய்முறை.
- முதலில் பாசுமதி அரிசியை 4 கப் நீரில் ஊறவைக்கவும்
- புதினா ,கொத்தமல்லியை கழுவி காம்பு நீக்கி அதனுடன் சோம்பு,பட்டை,கிராம்பு,வெங்காயம்,இஞ்சி,பூண்டு,தேங்காய் ,பச்சை மிளகாயும் சேர்த்து அரைக்கவும்.
- பின் வாணலியில் நெய் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய உருளைகிழங்கை போட்டு வதக்கவும்.அதில் கேரட் துருவலையும் வதக்கி,பின் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.பச்சை பட்டாணி சேர்க்கவும்.பின் அரிசி ஊறிய நீரை சேர்த்து கொதிக்கவிடவும்.தேவையான உப்பு சேர்க்கவும்.
- கொதித்ததும் அதில் ஊறிய அரிசியை போட்டு நன்றாக கலந்து மிதமான தீயில் வைத்து ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து அதே சூட்டில் 5 நிமிடம் வைத்து இறக்கவும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக