தேவையானவை.
- வெங்காயம் -- 2
- தக்காளி - 4
- பச்சைமிளகாய் - 3
- பூண்டு - 4பல்
- கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
- மஞ்சப்பொடி - அரைடீஸ்பூன்
- கறி வேப்பிலை - ஒரு ஆர்க்
- உப்பு - தேவையான அளவு
- தாளிக்க
- எண்ணை - 2ஸ்பூன்
- கடுகு - 1ஸ்பூன்
- பெருங்காயம் - சிறிதளவு
செய்முறை.
- வெங்காயம், தக்காளியை மெல்லிசாக நீளவாக்கில் கட்செய்யவும்.
- பச்சைமிளகாய், பூண்டு நறுக்கவும்.
- கடாயில் எண்ணை வைத்து கடுகு, பெருங்காயம் தாளித்து காய்கள்,பூண்டு மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- காய்கள் நன்கு வதங்கியதும்மஞ்சப்பொடிஉப்பு,ஒருகப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
- நன்கு கொதித்து காய்கள்மிருதுவானதும்,கடலை மாவிலொருகப் தண்ணீரூற்றி கரைத்து அதில் விடவும்.
- 5 நிமிடம் கொதித்ததும்கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக